மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 26 மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.
திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனவளர்ச்சி குன்றியோர், மூளைமுடக்குவாதம் போன்ற பல்வகை ஊனம் உடையோரின் நலனுக்காக18 வயது மேற்பட்ட 26 மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டபூர்வ பாதுகாவலர் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளி பயனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும் அதனைத் தொடர்ந்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மனவளர்ச்சி குன்றியோர், புற உலக சிந்தனை அற்றோர், மூளைமுடக்குவாதம் மற்றும் பல்வகை ஊனம் உடையோரின் நலனுக்காக18 வயது மேற்பட்ட 26 மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டபூர்வ பாதுகாவலர் சான்றுகளை மாவட்ட ஆட்சியர் பிரபு ஷங்கர் வழங்கினார்.
இந்நிகழ்வில் உதவி பயிற்சி ஆயுஷ் வெங்கட் வதஸ், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சீனிவாசன்ஆஷா தொண்டு நிறுவனம் இயக்குனர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். இதில் கலந்து கொண்ட மற்ற மாற்றுத்திறனாளின் மனு மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.