தாமரைப்பாக்கத்தில் திருவள்ளூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

தாமரைப்பாக்கத்தில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் நல்ல தம்பி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2024-04-15 09:36 GMT
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளருக்கு தாமரை பாக்கத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 39நாடாளுமன்ற தொகுதிகளிலும் வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலை  முன்னிட்டு அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் நல்ல தம்பிக்கு அக்கட்சியினர் மட்டும் இன்றி கூட்டணி கட்சியை சேர்ந்த அதிமுக கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் தெற்கு ஒன்றியம் சார்பில் வெங்கல், மற்றும் தாமரைப்பாக்கம், பூச்சி அத்தி பேடு, அம்மணம் பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் வேட்பாளர் நல்லதம்பி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி மக்கள் அவருக்கு மாலை அணிவித்து, மலர் தூவி பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது வேட்பாளர் நல்லதம்பி பேசுகையில் தன்னை வெற்றி பெற செய்தால் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தருவேன் என்றும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவேன் என்றும், கிராமங்களில் சாலை வசதி, தெரு விளக்குகள் வசதி, அனைத்து கிராம பகுதிகளிலும் பகுதி நேரம் மற்றும் முழு நேர நியாய விலை கடைகளை அமைத்து தர நடவடிக்கை எடுப்பேன் என்று இவ்வாறு பொதுமக்களிடம் கூறி வாக்கு சேகரித்தார். பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தமிழகத்தில் ஊழல் தலை விரித்து ஆடுகிறது என்றும்,

விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தாத அளவில் நடுத்தர மக்களை வாட்டி வதைக்கிறது என்றும், போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து படிக்கின்ற மாணவர்களையும் இளைஞர்களையும் சின்னாபின்னம் ஆக்குவதாகவும் இதனை தடுக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்த்து வருவதாகவும், கடந்த அதிமுக ஆட்சியின் போது மக்களுக்கு சிறப்பான முறையில் தேவையற்ற வசதிகளையும் செய்து தந்ததாகவும் அவர் பேசினார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறன் ஒன்றிய செயலாளர் வடமதுரை எம்.மகேந்திரன், எல்லாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் சரவணன், தட்சிணாமூர்த்தி, வெங்கல் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி ராணி லிங்கன், புஷ்பராஜ், ஸ்வீட் கணபதி, உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News