மோவூர் வளைவு சாலையில் ஓட்டுனரின் திறமையால் 30 பயணிகள் உயிர் தப்பினர்

மோவூர் வளைவு சாலையில் திடீரென ஏற்பட இருந்த விபத்து ஓட்டுனரின் திறமையால் தவிர்க்கப்பட்டது. 30 பயணிகள் உயிர் தப்பினர்.;

Update: 2021-08-27 08:41 GMT

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரில் இருந்து ராமஞ்சேரி மேட்டுப்பாளையம் நோக்கி அரசு பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

அப்போது பூண்டி அடுத்த மோவூர் வழிச்சாலையில் எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக பேருந்தை டிரைவர் சாலையில் ஓரமாக திருப்பினார்.

பேருந்து எதிர்பாராத விதமாக சாலையை விட்டு பேருந்து விலகிச் சென்றது.  ஓட்டுனர் வெங்கடேசன் திறமையால் பேருந்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார்.

இதில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த 30பயணிகள் எந்த ஒரு வித பாதிப்பும் இல்லாமல் உயிர் தப்பினர்.

Tags:    

Similar News