வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகை கொள்ளை
திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 10 சவரன் தங்க நகை, பணம் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;
திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் கொத்தனார் வீட்டின் பூட்டை உடைத்து வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி பீரோவில் இருந்த 10 சவரன் நகை, 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த புட்லூர் எம்ஜிஆர் நகர் பகுதி சேர்ந்தவர் ஏசையா, இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார், இந்நிலையில் வழக்கம் போல் பணிக்கு சென்று மாலை வீடு திரும்பிய ஏசாயா, வீட்டின் கதவு உடைக்கப்பட்டதை கண்டு வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டும், பீரோ திறக்கப்பட்டு கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் பீரோவில் இருந்த 10 சவரன் நகை, ₹20,000 ரொக்கம் ஆகியவை கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்துள்ளது.
இது குறித்து ஏசையா செவ்வாப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை வலைவீச்சி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.