போக்குவரத்து பணிமனை பொது மேலாளர் மீது லஞ்ச புகாரால் பரபரப்பு

திருவள்ளூர் பேருந்து ஓட்டுனரிடம் பணம் கேட்பதாக போக்குவரத்து பணிமனை பொது மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க பேருந்து ஓட்டுநர் புகார் அளித்துள்ளார்.;

Update: 2024-01-20 13:15 GMT

புகார் மனுவுடன் பேருந்து ஓட்டுநர் பத்மநாபன். 

திருவள்ளூர் போக்குவரத்து பணிமனை பொது மேலாளர் அதிக அளவில் மன அழுத்தம் கொடுத்தால் பணியில் இருந்து விலகுவதாகவும் அதற்கு காரணமானவர்கள் மீது தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்து ஓட்டுனர் பத்மநாபன் மனவேதனையுடன் தெரிவித்தார்.

அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக கடந்த 25 ஆண்டு காலமாக பணிபுரிந்து வருபவர் பத்மநாபன். இவருக்கு பைல்ஸ் எனப்படும் மூலநோய் காரணமாக நீண்ட தூர பேருந்துகளை இயக்க முடியாது என கேட்டுக் கொண்டதன் பேரில் பொது மேலாளர் அதற்காக தனியாக கையூட்டு பெற்று குறைந்த தூரத்தில் பேருந்து இயக்க அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. அதற்காக பொது மேலாளருக்கு மாதம் மாதம் பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது‌.

மேலும் பத்மநாபன் அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து வந்ததாகவும், ஒரு காலகட்டத்தில் அவரால் அந்தத் தொகையை மாதம் மாதம் கொடுக்க முடியாது நிலையும் ஏற்பட்டது.

இதனால் பொது மேலாளர் பத்மநாபனுக்கு கோயம்பேடு மற்றும் கோயம்பேட்டில் இருந்து திருச்சி போன்ற நீண்ட தூர பணிகளை அவருக்கு வழங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது,

மேலும் இதுபோன்று லஞ்சம் பெற்று அராஜகமாக செயல்பட்டு வரும் பொது மேலாளரின் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்மநாதன் தமிழக முதல்வருக்கும் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சருக்கும் புகார் விடுத்துள்ளார். அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் என்னுடைய வேலையை ராஜினமாக செய்வதாக வேதனையுடன் ஓட்டுநர் பத்மநாபன் தெரிவித்தார்.

Similar News