திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் அட்டகாசம் செய்த குரங்குகள் பிடிபட்டன
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக அட்டகாசம் செய்த குரங்குகள் இன்று பிடிபட்டன.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களில் உள்ள உணவகங்களில் குரங்குகள் உணவுகளை எடுத்துக் உண்டு அப்பகுதியில் உள்ள வளாகங்களில் அட்டகாசம் செய்வதால் அதனைக் இன்று வனத்துறை ஊழியர்கள் கூண்டு வைத்து பிடித்தனர்.
இந்த கூண்டில் இன்று 4 குரங்குகள் சிக்கின. சிக்கிய 4 குரங்குகளையும் ஆட்சியர் அலுவலகத்தை விட்டு தள்ளி எடுத்துச்செல்லப்பட்டு மரங்கள் நிறைந்த பகுதியில் குரங்குகள் விடுதலை செய்யப்பட்டனர்.