பெரியபாளையம் அருகே பட்டப் பகலில் வீட்டின் கதவை உடைத்து ரூ.10 லட்சம், நகை கொள்ளை
பெரியபாளையம் அருகே பட்டப் பகலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயியான துரைக்கண்ணு. இவரது இளைய மகனின் திருமணத்திற்காக வீட்டில் 10லட்ச ரூபாய் பணத்தை பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.
உறவினரின் சுப நிகழ்ச்சிக்காக இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த துரைக்கண்ணு பிற்பகல் வீட்டை பூட்டி விட்டு உணவு வாங்குவதற்காக பெரியபாளையம் சென்றுள்ளார். ஹோட்டலில் உணவு வாங்கி கொண்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 10லட்ச ரூபாய் ரொக்கம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து விவசாயி துரைக்கண்ணு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பட்டப்பகலில் துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் வளவிச்சி தேடி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.