திருவள்ளூர் அருகே லாரி ரோப் அறுந்து விழுந்ததில் கார் நசுங்கியது
திருவள்ளூர் அருகே லாரி ரோப் அறுந்து விழுந்ததில் கார் நசுங்கியது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திருவள்ளூர் அருகே மணவாள நகர் பகுதியில் பிரபல கேட்டர்பில்லர் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் ஜே.சி.பி. உள்ளிட்ட உயர் ரக வாகனங்களை தயாரித்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேட்டர்பில்லர் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு வாடகை கார் மூலம் ஊழியர்களை கொண்டு சென்று விடுவதும் அவர்களை அங்கிருந்து ஏற்றி ஊழியர்களின் வீட்டிற்கு விடுவதுமாக 100க்கும் மேற்பட்ட வாடகை கார்கள் இயங்கி வருகிறது.
அதுபோல் இன்று ராஜ் என்பவர் தனது காரில் கேட்டர்பில்லர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரை ஏற்றிக்கொண்டு கேட்டர்பில்லர் நிறுவனத்தில் இறக்கிவிட்டு பின்னர் அருகில் உள்ள கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் உணவு அருந்துவதற்காக சாலையோரம் காரை நிறுத்தி உள்ளார்.
கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை ஏற்றிச்சென்ற கண்டைனர் லாரி திருவள்ளூர் பகுதியில் இருந்து கேட்டர்பில்லர் நிறுவனத்தை நோக்கி சென்ற பொழுது ஸ்ரீபெரும்புதூர் சாலையில் திடீரென உதிரிபாகம் கட்டியிருந்த ரோப் தரமற்றிருந்ததால் அறுந்து விழுந்துள்ளது. அப்பொழுது கேட்டர்பில்லர் நிறுவனத்தில் ஊழியர்களை நிறுவனத்தில் இறக்கிவிட்டு நின்று கொண்டிருந்த ராஜியின் கார் மீது உதிரிபாகங்கள் விழுந்ததில் கார் நசுங்கி சுக்கு நூறானது.
அந்த தருணத்தில் ராஜி ஹோட்டலில் உணவருந்தி கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். மேலும் எப்பொழுதும் கூட்ட நெரிசளுடன் காணப்படும் சாலையில் சுமார் 20 நாட்களுக்கு முன்னால் இதேபோன்று கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை ஏற்றி வந்த கண்டைனர் லாரி விபத்துக்குள்ளான நிலையில் தற்பொழுதும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.