கூவம் ஆற்றில் போதையில் விழுந்தவர்களின் உடல்கள் சடலமாக மீட்பு
சென்னை கூவம் ஆற்றில் போதையில் விழுந்தவர்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டது.;
சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றில் மது போதையில் விழுந்த நிலையில் ஒருவரை மீட்டெடுத்ததை தொடர்ந்து மற்றொருவரை தீவிரமாக தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை சிந்தாரப்பேட்டை கூவம் ஆற்றில் பாலத்தின் மீது மெட்ரோ பைப் மீது ஏறி பழனி என்பவர் போதையில் நேற்று உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென கூவம் ஆற்றில் விழுந்து இறந்துள்ளர்.
அந்த வழியே சென்ற பொது மக்கள் இச்சம்பவம் குறித்து காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மற்றும் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கூவம் ஆற்றில் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி அருகில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதை அடுத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் புறப்பட்டு செல்லும் பொழுது அதே வழியில் வந்த மற்றொருவர் நபர் போதையில் நிலை தடுமாறி அதே கூவம் ஆற்றில் விழுந்து உயிரிழந்தார்,
இந்நிலையில் கூவம் ஆற்றில் மது போதையில் தவறி விழுந்த மற்றொரு நபரை தீயணைப்பு துறை வீரர்கள் மாலை வரை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில் உடல் கிடைக்கப்பெறாததை தொடர்ந்து தற்போது ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர், மீண்டும் தீவிரமாக இரண்டாவது நாளும் தேடி வருகின்றனர்.
சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட சிந்தாதிரிப்பேட்டை ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான போலீசார் முதலில் கைப்பற்றப்பட்ட உடல் பெரும்பாக்கம் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த பழனி என்பதும் திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளதாகவும் மேலும் மற்றொரு நபர் பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த தேவராஜ் (வயது58 )என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.