பாலாம்பிகை சமேத ஸ்ரீ ஆலிங்கனபாலீஸ்வர சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா
Temple Kumababhisekam திருவள்ளூர் அருகே பாக்கம் கிராமத்தில் பாலாம்பிகை சமேத ஸ்ரீ ஆலிங்கனபாலீஸ்வர சுவாமி திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.;
பாக்கம் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ ஆலிங்கனபாலீஸ்வர சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Temple Kumababhisekam
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர்-தாமரைப்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ளது பாக்கம் கிராமம் ஆகும். இக்கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ ஆலிங்கனபாலீஸ்வர சுவாமி என்றஸ்ரீ தவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது.
அருணகிரிநாதர் மற்றும் பாம்பன் சுவாமிகள் பாடற்புராணம் பெற்றது இத்திருக்கோவில் ஆகும். இக்கோவிலில் பௌர்ணமி மற்றும் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் சந்திராஷ்டமதோஷ நிவர்த்தி செய்து கொள்ள பூஜைகள் நடைபெறுகின்றது. எனவே சந்திராஷ்டம தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும்,குரு ஸ்தலமாகவும் இக்கோவில் விளங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
Temple Kumababhisekam
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இவ்வாறு சிறப்பு பெற்ற இக்கோவிலுக்கு 2006-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்நிலையில், இக்கோவிலை பரம்பரை ஆலய தர்மகர்த்தா குடும்பத்தினர்,கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் புதுப்பித்து இன்று காலை மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.இதை முன்னிட்டு கலச ஸ்தாபனம், கோ பூஜை,லட்சுமி பூஜை, நவகிரக பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், மகாபூர்ணாகுதி உள்ளிட்டவை நடைபெற்றது.பின்னர்,இன்று காலை மங்கள வாத்தியம் முழங்க திருநின்றவூர் 30 பேர் கொண்ட சிவாச்சாரியார்கள் குழுவினர்கள் மணியம் விஸ்வநாதன் முன்னிலையில்புனித நீர் அடங்கிய கலசங்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
பின்னர்,மூலவர்,விமான கோபுரங்களுக்கு, ராஜகோபுரங்களுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதன் பின்னர்,மூலவருக்கு மகா அபிஷேகம்,மகா அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றது.பின்னர்,தூப தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பின்னர், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.கோவிலுக்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்,பாக்கம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை ஆலய தர்மகர்த்தா குடும்பத்தினர் மற்றும் பாக்கம் கிராம பொதுமக்கள்,விழா குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.நாளை முதல் 48 நாட்கள் மண்டல அபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.