ஆற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி!
ஊத்துக்கோட்டை அருகே இளைஞர் ஒருவர் ஆரணி ஆற்றில் மூழ்கி பலியானார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (23) என்பவர் ஆரணி ஆற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி பலி ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் இவர் அப்பகுதியில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார் இவரது மகன் ராஜ்குமார் (23) என்பவர் அப்பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் நேற்று மாலை குளிக்க சென்றுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி மாயமானர்.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸாருக்கும், சிப்காட் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து சம்பவ சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய ராஜ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 12 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு இளைஞரை தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றிய ஊத்துக்கோட்டை போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரணி ஆற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.