டாஸ்மாக் கடையில் கூடுதல் விலை விற்பதாக மதுபிரியர்கள் குற்றச்சாட்டு

Tasmac Excess Rate Sales பெரியபாளையம் அருகே பாலேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மார்க் மதுபான கடையில் பாட்டில் மீது 10 முதல் 80 ரூபாய் வரை ஊழியர்கள்கூடுதலாக வசூலிப்பதாக மதுப்பியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.;

Update: 2024-01-16 03:45 GMT

Tasmac Excess Rate Sales

பெரியபாளையம் அருகே அரசு டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் பணம் வசூலிப்பதாக மதுபிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் பின்புறம் பாலேஸ்வரம் பகுதியில் 9067 என் கொண்ட அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் நாள்தோறும் 1000.க்கும் மேற்பட்ட மதுபிரியர்கள்  மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் அரசு நிர்ணயத்த விலையை விட 10 முதல் 40 வரை கூடுதலாக பணம் வசூலிப்பதாக மது பிரியர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள்  தெரிவிக்கையில் அரசு நாங்கள் நாள்தோறும் கூலி வேலை செய்து நாள் ஒன்றுக்கு 300.முதல்400 ரூபாய் வரையில் வேலை செய்து வருவதாகவும் எங்களுக்கு கலைப்பு தெரியாத இருக்க மாலை நேரங்களில் தங்களுக்கு ஏற்ற குறைந்த விலைக்கு மது வாங்கி அருந்தி விடுவோம் என்றும். அரசு நிர்ணயத்த விலையை விட பாட்டில் ஒன்றுக்கு10 ரூபாயும், அதுவே ஆஃப் பாட்டில் என்றால் 20,ரூபாயும் ஃபுல் பாட்டில் என்றால் 40 ரூபாயும், பீர் பாட்டிலுக்கு ரூபாய் 50 அதுவே உயர் ரக மதுபானம் என்றால் 60 முதல் 80 ரூபாய் வரை வசூல் செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

கூடுதலாக பத்து ரூபாய் கொடுக்க மறுத்தால் மதுபானம் இல்லை என்று திருப்பி அனுப்பி வைக்கின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்தக் கடை மேலாளர் மற்றும் விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கடந்த ஆண்டு அரசு அரசு டாஸ்மாக் மதுபான கடையில் நிர்ணயத்த விலையை விட கூடுதலாக வசூல் செய்யும் விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் அனைத்து மண்டல மேலாளர்கள் மற்றும் பொறுப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுகளை கடையில் பணி செய்யும் ஊழியர்கள் கடைப்பிடிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News