புத்தக கண்காட்சியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஏப்ரல்2 முதல் வரும் 11ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது;

Update: 2022-04-01 08:00 GMT

திருவள்ளூரில் புத்தகக்கண்காட்சியை திறந்து வைத்த அமைச்சப் சா.மு. நாசர்

திருவள்ளூர் மாவட்டத்தில் முதன்முறையாக திருவள்ளூர் மாவட்ட புத்தக கண்காட்சி குழு மற்றும் பப்பாசி இணைந்து நடத்தும்  புத்தகத்திருவிழா கண்காட்சியை அமைச்சர் சா.மு நாசர், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.ஜி.ராஜேந்திரன், ஆட்சியர் ஆல்பிஜான்வர்கீஸ். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ரிப்பன்வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

 திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஏப்ரல்2 முதல் வரும்  11ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் 40 சான்றோர்கள். 110 அரங்குகள். 50 ஆயிரம் தலைப்புகளில். ஒரு லட்சம் புத்தகங்கள் இடம் பெறுகின்றன ஒரு லட்சம் பார்வையாளர்களை கொண்டு நடத்த திட்டமிட்டுள்ளது.

திருவள்ளூரில் முதன்முதலாக புத்தக கண்காட்சியில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  நாளை முதல் வரும் 11-ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ள புத்தகத்திருவிழா கண்காட்சியில் புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டுமென மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்  விடுத்துள்ளது.


Tags:    

Similar News