பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் 1000 கன அடியாக அதிகரிப்பு

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

Update: 2024-01-08 11:40 GMT

பூண்டி சத்திய மூர்த்தி நீர்த்தேக்கம்.

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத்து 1000 கன அடியாக அதிகரித்து வருவதால் கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீர் திறப்பு 50 கன அடியிலிருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வட தமிழகம் மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக  திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக விட்டு விட்டு மிதமான முதல் கனமழையானது பெய்து வருகிறது.

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நேற்றைய தினம் 200 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. அது இன்று 1000 கன அடியாக அதிகரித்து வருவதால் காலை நீர்த்தேக்கத்திலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 50 கன அடியானது திறந்துவிடப்பட்ட உபரி நீர் அது 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


நீர்த்தேக்கத்தின் மொத்த மில்லியன் கன அடி 3231 மில்லியன் கன அடியில் தற்போது 3073 மில்லியன் கனஅடி நீர் இருப்பானது இருந்து வருகிறது. அதேபோன்று நீர்த்தேக்கத்தின் மொத்த அடி 35 தற்போது 34. 75 அடி உயரத்தில் நீர் இருப்பு உள்ளது.

மேலும் கனமழை அதிகரித்தால் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிக்க கூடும் எனில் கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீர் திறப்பு அதிகரிக்க கூடும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கொசஸ்தலை ஆற்றில் நீர் திறப்பு அதிகரித்தால் சுற்றுவட்டார பகுதி மக்கள் பாதிக்கப்பட கூடும் என்பதால் வருவாய் துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள்.

Tags:    

Similar News