கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்கள் ஆட்சியரிடம் வாழ்த்து
புதுடெல்லியில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற திருவள்ளூர் மாணவர்கள் ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர்.;
புதுடெல்லியில் நடைபெற்ற கராத்தே போட்டியில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு தங்கப்பதக்கம். மூன்று வெண்கல பதக்கங்களை பெற்று சாதனை. மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கிசை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புதுடெல்லியில் உள்ள தல்கடோரா உள் விளையாட்டு அரங்கில் 31.5.2023 முதல் 02.6.2023 வரை கராத்தே அசோசியேசன் ஆப் இந்தியா நடத்திய தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் குஜராத், கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 1200 இக்கும் மேற்பட்ட கராத்தே மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 மாணவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இதில் திருவள்ளூர் மாவட்ட தொழில்நுட்ப இயக்குனர் விஜயராகவன், செயலாளர் தக்ஷிணாமூர்த்தி, தலைவர் ராஜா,பொருளாளர் தனசேகர் , துணைச் செயலாளர்கள் ரமேஷ் குமார், மற்றும் தியாகராஜன் பயிற்சியாளர் தீபன் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர்.
இதில் ஒரு மாணவி தங்கப் பதக்கமும், மூன்று மாணவர்கள் வெண்கலப் பதக்கம் பெற்றனர். இப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் தேசிய அளவில் நடுவர்களாக தேர்வு பெற்றவர்கள். வெற்றி பெற்ற அனைத்து மாணவர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.