திருவள்ளூர் நீதிமன்றத்தில் பணியின்போதே சுருக்கெழுத்தாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பணியின்போது சுருக்கெழுத்தாளர் மாரடைப்பால் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-08-18 07:53 GMT

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தாளராக பணியாற்றி வந்தவர் சரஸ்வதி (59). சென்னை வடபழனியை சேர்ந்த இவர் நேற்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்குப் பிறகு நீதிபதி செல்வ சுந்தரி தீர்ப்புக்கான தகவலை வாசித்தபோது அதனை தட்டச்சு செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார்.

உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News