வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு

வெங்கல் அருகே தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை நாய்கள் துரத்தி கடித்ததில் மான் பரிதாபமாக உயிரிழப்பு.

Update: 2024-05-02 06:45 GMT

நாய்கள் கடித்ததால் உயிரிழந்த மான் 

திருவள்ளூர் மாவட்டம், வெங்கலில் சமூக காடு உள்ளது. இந்த காட்டில் மான்கள், குரங்கு, முயல் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் தேடி அவை ஊருக்குள் வருகின்றன, கிடைத்த தண்ணீரை பருகி விட்டு மீண்டும் வனப்பகுதிக்கு சென்று விடும்.

அந்த வகையில் இன்று காலை வெங்கல் அடுத்த காதர்வேடு கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி 5.வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் ஒன்று அங்குள்ள வயல்வெளிக்கு வந்தபோது அதனைக் கண்ட வெறி நாய்கள் புள்ளி மாலை துரத்தி சுற்றி வளைத்து கடித்து குதறியது.

இதனைக் கண்ட அப்பகுதிவாசிகள் கற்களை வீசி எறிந்து, வெறி நாய்களை விரட்டி அடித்தனர். இதில் நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த அந்தப் புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து அப்பகுதிவாசிகள் அளித்த தகவல் பெயரில் நிகழ்வு இடத்திற்கு வந்த செங்குன்றம் சரக வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வனத்துறையினர் முன்னேற்பாடாக வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு தேவையான குடிநீர் ஏற்பாடுகளை செய்ய தவறியதால் இதுபோன்று வனவிலங்குகள் தண்ணீர் தேடி கிராம பகுதிகளை நோக்கி வரும்பொழுது வாகனங்களில் அடிபட்டும், வெறி நாய்களிடம் சிக்கி உயிரிழப்பதும், அடிக்கடி நடைபெறுவதாக வேதனை தெரிவித்துள்ள வனவிலங்கு ஆர்வலர்கள் வனவிலங்குகளின் உயிர் இழப்பிற்கு வனத்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

Similar News