எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு மகா கால பைரவர் ஆலயத்தில் சிறப்பு பூஜை

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு மகா கால பைரவர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update: 2023-05-14 02:45 GMT

எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு இனிப்பு வழங்கும்  அதிமுகவினர்.

தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்தநாள் விழா தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டை அடுத்த தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ள மகா காலபைரவர் கோவிலில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரில் சிறப்பு பூஜை, மற்றும் இனிப்பு, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் விமல் கோபிநாத் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ். விஜயகுமார் கலந்துகொண்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி அன்னதான நிகழ்ச்சி துவக்கி வைத்தார்.

இதில் முன்னாள் கிளைச் செயலாளர் கோதண்டன், ஒன்றிய கவுன்சிலர் லதா அசோக், ஊத்துக்கோட்டை பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர் ஆனந்தி, பொதுக்குழு உறுப்பினர் ரத்தினம்,தாராட்சி ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி செஞ்சுவேல், துணைத் தலைவர் வேலு, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் கார்த்திக், நிர்வாகிகள் லோகேஷ், பிரேம், சரவணன்,இளங்கோ, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News