திருவள்ளூரில் புகையில்லா போகி பண்டிகை விழிப்புணர்வு பிரச்சார வாகனம்
திருவள்ளூரில் புகையில்லா போகி பண்டிகை மீண்டும் மஞ்சப்பை பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக மீண்டும் மஞ்சப்பை மற்றும் புகையில்லா போகிப் பண்டிகை விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக மீண்டும் மஞ்சப்பை மற்றும் புகையில்லா போகிப் பண்டிகை விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பின்னர் மஞ்சப்பைகளை பொதுமக்களுக்கு ஆட்சியர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள், மீண்டும் மஞ்சப்பை மற்றும் புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொழிற்சாலையின் பங்களிப்புடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் ஒலி அறிவிப்புகளுடன் கூடிய எல்.இ.டி காணொளி திரை பொருந்திய வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பார்வையிட்டார்.
இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மூலம் 15 நாட்களுக்கு திருவள்ளூர், பூவிருந்தவல்லி, ஆவடி, திருத்தணி, ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட்டை,பள்ளிப்பட்டு ஆகிய வட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில் போகிப்பண்டிகையன்று மக்கள் தங்களிடமுள்ள செயற்கை பொருட்களான டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் பிற தேவையற்ற பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், இதனால் சுற்றுச்சூலை பாதிக்கப்படும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று கூறினார்.
இதில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் மணிமேகலை, உதவி பொறியாளர்கள் ஸ்ரீ லேகா,சபரிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.