ஊத்துக்கோட்டையில் சித்த மருத்துவ முகாம் பேரணி

ஊத்துக்கோட்டையில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில் சித்தா ஆரோக்கிய பேரணி, விழிப்புணர்வு பிரசாரம், இருசக்கர பேரணி நடைபெற்றது.;

Update: 2024-02-08 05:45 GMT

மருத்துவ முகாமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கும் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் வாசுதேவன்

ஊத்துக்கோட்டை தொடக்கப்பள்ளி வளாகத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில் சித்தா ஆரோக்கிய பேரணி, விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் இருசக்கர வாகன பேரணி, மருத்துவ முகாம்  நடைபெற்றது.

இதில் டாக்டர் மீனா குமாரி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் முத்து, தலைமையாசிரியர் கதிரவன் வரவேற்றனர். பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் அபிராமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் அப்துல் பரீத், தமிழ்செல்வம், கவுன்சிலர் கோகுல் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் வாசுதேவன் மருத்துவ முகாமை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார். முகாமில் டாக்டர் அன்பரசு தலைமையில் மாணவர்கள் உட்பட 500 பேருக்கு சிகிச்சையளித்து அவர்களுக்கு சித்தா மருந்து பெட்டகம் வழங்கினர்.

புதுடெல்லியில் கடந்த மாதம் 24 தேதி அன்று 17 சித்த மருத்துவர்கள் உட்பட 22 பேர் பங்கேற்ற பேரணி பிற்பகல் 1 மணியளவில், ஊத்துக்கோட்டை அண்ணாசிலையை வந்தடைந்தது. அவர்களுக்கு ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் மலர் மாலை அணிவித்து , பூச்செண்டு கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர் .

 இங்கிருந்து சென்னை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, நெல்லை வழியாக 3333 கிலோ மீட்டர் விழிப்புணர்வு பயணம் செய்து 8 மாநிலங்கள் 21 நகரங்கள் வழியாக இந்த பேரணி கன்னியாகுமரி சென்றடைகிறது.

இந்நிகழ்ச்சியில் சித்தா டாக்டர்கள் மாதவன், ராமமூர்த்தி, யூஜின், ராஜேந்திர குமார் மற்றும் திலீப் உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் ஆசிரியர் பாண்டியன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News