தரமற்ற உணவு சமைத்து அளித்த சக்தி கிச்சன் மேற்பார்வையாளர்கள் கைது
தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு சமைத்து அளித்த சக்தி கிச்சன் மேற்பார்வையாளர்கள் இரண்டு பேரை வெள்ளவேடு காவல்துறையினர் கைது செய்தனர்;
தரமற்ற உணவு சமைத்து அளித்த சக்தி கிச்சன் மேற்பார்வையாளர்கள்
திருவள்ளூர் அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த ஃபாக்ஸ்கான் ஒப்பந்த பெண் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட உணவு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அதற்கு காரணமான தரமற்ற உணவு தயாரித்துக் கொடுத்த சக்தி கிச்சன் மேற்பார்வையாளர்கள் பிபின் மற்றும் கவியரசு ஆகிய இருவரை வெள்ளவேடு காவல்துறையினர் கைது செய்தனர்
அதேபோன்று சக்தி கிச்சன் உரிமையாளர் சாந்தகுமார் சமையலர் முனுசாமி மற்றும் கல்லூரி மேலாளர் செந்தில்குமார் ஹேமப்பிரியா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர் .
சமையலர் முனுசாமி சபரிமலை ஐயப்பன் கோவில் சென்றிருப்பதாகவும் அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.