திருவள்ளூர் அருகே அனுமதி இன்றி செயல்பட்டு வந்த தொழிற்சாலைகளுக்கு சீல்
திருவள்ளூர் தொடுக்காடு ஊராட்சியில் பல ஆண்டுகளாக அனுமதியின்றி அரசுக்கு வரி இழப்பு செய்த மூன்று தொழிற்சாலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.;
திருவள்ளூர் அடுத்த தொடுகாடு ஊராட்சியில் அனுமதியின்றி பல ஆண்டுகளாக செயல்பட்டு அரசுக்கு வரி இழப்பு செய்த 3 தொழிற்சாலைகளுக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் அடுத்த தொடுகாடு ஊராட்சியில் அனுமதியின்றியும் சில தொழிற்சாலைகள் வரி செலுத்தாமலும் பல ஆண்டுகளாக 30 மேற்பட்ட கம்பெனிகள் செயல்பட்டு அரசுக்கு 34 கோடி வரி இழப்பு செய்து வருவதாக தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
அவ்வழக்கின் விசாரணையில் மாவட்ட ஆட்சியர் கண்டறிந்து அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தொடுகாடு ஊராட்சியில் பல ஆண்டுகளாக அனுமதியின்றி அரசுக்கு வரி இழப்பு செய்து வந்த வி .கே .பி இன்ஜினியரிங், எஸ்.ஆர் ப்ரொபைல், ஸ்ரீ கணேஷ் ஐ டி டேக் , ஜே ஆர் சி கன்ஸ்ட்ரக்சன், தக்சன் எக்ஸ்போர்ட் ஆகிய 5 கம்பெனிகளை கண்டறியப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் அடிப்படையில் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணி சேகர் தலைமையிலான அதிகாரிகள் எஸ் ஆர் ப்ரொபைல், வி கே பி இன்ஜினியரிங், ஸ்ரீ கணேஷ் ஐ டேக் ஆகிய 3 கம்பெனிகளை கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.