வேப்பம்பட்டு: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை, வாலிபர் கைது

வேப்பம்பட்டு பஜார் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-07-01 17:09 GMT

செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையம் (பைல்படம்)

திருவள்ளூர் மாவட்ட செவ்வாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேப்பம்பட்டு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் கணேஷ் வேப்பம்பட்டு பஜார் பகுதிக்கு சென்று சோதனை செய்தபோது அங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான ஹான்ஸ், எம்டிஎம் போன்ற குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.

இதனையடுத்து போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக ரமேஷ்குமார் (36) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News