திருவள்ளூர் அருகே எஸ். பி. வேலு மணியின் நண்பர் தொழிற்சாலையில் ரெய்டு

IT Raid News -திருவள்ளூர் அருகே எஸ். பி. வேலு மணியின் நண்பர் தொழிற்சாலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினார்கள்.

Update: 2022-09-14 04:15 GMT

தொழிற்சாலை முன் லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

IT Raid News -தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றம் திட்டத்தின் மூலம் கடந்த அ தி மு க  ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ். பி. வேலுமணி 500 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதை தொடர்ந்து அவருக்கு தொடர்புடைய 10 மேற்பட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி, திருவள்ளூர் உள்ளிட்ட 31 இடங்களில் 100 மேற்ப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை மேற்கொண்டனர்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த படூர் பகுதியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். பி. வேலுமணி நண்பரான ஒப்பந்ததாரர் சீனிவாசனுக்கு சொந்தமான ஏ.சி.இ. டெக் கனரக வாகன உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் 13 மணி நேரம் மேலாக சோதனை மேற்கொண்டதில் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து கைப்பற்றினார்கள்.

ஏற்கனவே இந்த தொழிற்சாலையில் கடந்த ஜூலை மாதம் 3 ந் தேதி முதல் 6 ந் தேதி வரை 4 நாட்களாக விடிய விடிய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News