சோழவரம் அருகே இந்திரேஸ்வரன் கோவிலில் ருத்ரயாகம்

சோழவரம் அருகே ஆங்காடு ஊராட்சியில் அமைந்துள்ள இந்திரேஸ்வரர் கோவிலில் ருத்ர யாக பூஜை நடைபெற்றது.;

Update: 2023-12-19 10:58 GMT
சோழவரம்  அருகே இந்திரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆங்காடு இந்திரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை 5வது வார சோமவாரத்தை முன்னிட்டு நடைபெற்ற ருத்ரயாகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த ஆங்காடு கிராமத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்திரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவலோக அதிபதி இந்திரன் இங்கு வந்து ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் இதற்கு பின்னர் தான் இக்கோவிலுக்கு இந்திரேஸ்வரர் கோவில் என பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது. இவ்வளவு சிறப்புவாய்ந்த இக்கோவிலில் கார்த்திகை மாத ஐந்தாவது வார சோமவாரத்தை முன்னிட்டு மிகவும் சக்திவாய்ந்த ருத்ரயாகம் நடைபெற்றது.

இந்த சிறப்புவாய்ந்த யாகத்தில் புனித கலசங்களும், 108வலம்புரி சங்குகளும் பிரதானமாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. பாரதி சிவாச்சார்யார் தலைமையில் வேதமந்திரம் ஓதியபடி பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த யாக குண்டத்தில் ருத்ரயாகம் வார்த்து .நறுமண திரவியங்கள் மற்றும் நெய்யை ஊற்றி யாகம் நடத்தப்பட்டு பூரணாஹதி செய்யப்பட்டது.


இதனை தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித கலசங்கள் மற்றும் 108 வலம்புரி சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு விநாயகர், முருகன் வள்ளி தேவானை மற்றும் மூலவர் இந்திரேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் தீப. தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இவ்விழாவில் செங்குன்றம்,சோழவரம், பாடியநல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று இந்திரேஸ்வரரை வழிபட்டு சென்றனர். பின்னர் ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய குழுவினர், கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News