திருவள்ளூர் அருகே கோவில் உண்டியல் உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு

திருவள்ளூர் அருகே திருப்பாச்சி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-17 10:00 GMT

கண்காணிப்பு கேமரா பதிவு.

திருவள்ளூர் அருகே தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து ரூபாய் ஒரு லட்சம் திருட்டு : அடுத்த மாதம் கோவில் திருவிழா நடைபெற உள்ள நிலையில் பூட்டை உடைத்து திருடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

திருவள்ளூர் அடுத்த சின்ன ஈக்காடு பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ தீப்பாஞ்சி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த அம்மன் கோவில் தினந்தோறும் அப்பகுதி சுற்றியுள்ள பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருவது வழக்கமாகும்.

நேற்று இரவு எட்டு மணி அளவில் கோவில் நிர்வாகி மதன் கோவிலை முறைப்படி பூட்டிவிட்டு சென்று உள்ள நிலையில் இன்று காலை 6 மணிக்கு வந்து பார்த்தபோது கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது  குறித்து அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் கோவிலில் திருடப்பட்டு உள்ள சம்பவம் குறித்து புல்லரம்பாக்கம் காவல் நிலைய போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு போலீசார் மோப்ப நாய்கள் விரைந்து வந்த திருடர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

பின்னர் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கோவில் உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த மாதம் கோவில் திருவிழா நடைபெற உள்ள நிலையில் கோவிலில் திருவிழாவிற்காக பக்தர்கள் காணிக்கை அளித்த பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News