திருவள்ளூரில் ரூ. 1 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு
திருவள்ளூரில் சுமார் 1.கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை தனியார் தொண்டு நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருந்த கட்டிடங்களை அகற்றி அதிகாரிகள் மீட்டெடுத்தனர்.;
ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை ஜெ.சி.பி இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்தது.
திருவள்ளூரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் என்ற தொண்டு நிறுவன அமைப்பின் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த சுமார் 1கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது.
திருவள்ளூர் நகராட்சிக்கு சொந்தமான அரசு சொத்துக்கள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களை மீட்கும் பணியில் திருவள்ளூர் மாவட்ட வருவாய்த்துறை மற்றும் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது,
அதனை தொடர்ந்து திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் என்ற( என் ஜி ஓ ) என்ற அமைப்பின் மூலமாக 30 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் ஒரு கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம், ஜெராக்ஸ் கடை உள்ளிட்டகைகளுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்த நிலையில் அந்த இடத்தை திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன், தலைமையில் நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தின் மூலமாக கட்டிடங்களை இடிக்கப்பட்டு அரசு சொந்தமான இடத்தை மீட்கப்பட்டன.
மேலும் திருவள்ளூர் நகராட்சிக்கு சொந்தமான நகராட்சி பூங்காக்கள், நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு இடங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அதனை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.