சாலையை சீர் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

மாளந்தூர்-ஆவாஜி பேட்டை சாலையை சீர் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-21 11:14 GMT

பெரிய பாளையம் அருகே சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

பெரியபாளையம் அருகே மாளந்தூர்-ஆவாஜி பேட்டை கிராமப்புற சாலை பணிகளை உடனடியாக நிறைவேற்ற கோரி 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் சீதஞ்சேரி நெடுஞ்சாலையில் இருந்து மாளந்தூர் பாபாஜி பேட்டைக்கு செல்லும் கிராமப்புற சாலை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஆகும். இந்த சாலையை ரூபாய் ஆறு கோடி மதிப்பீட்டில் நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சாலை பணிகளை செய்ய ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தாலியை தோண்டி சமம் செய்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் வனத்துறைக்கு மாளந்தூர் பகுதியில் சுமார்.600 மீட்டர் சாலையும், ஆவாஜிபேட்டையில்400. மீட்டர் சாலையும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட அந்தப் பகுதியில் சாலை அமைக்க வனத்துறை அதிகாரிகள் ஆட்சேபனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சாலை அமைக்கும் பணி கடந்த ஒரு மாத காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது கிராமத்திற்கு செல்லவும், மருத்துவமனைகளுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்ல மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெங்கல், பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்களிலும் நடந்தும் சென்றுவர இயலாமல் சாலை வசதி இன்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இப்பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் மக்கள் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கை படவில்லை.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாளந்தூர் ஆவாஜி பேட்டை கிளை சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு தங்களது கிராமத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலையை உடனடியாக சீர் செய்து தருமாறு வெங்கல் சீதஞ்சேரி சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரி கிளாமெனட் எடிசன் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களையும் எழுப்பினர். சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக வருவாய்த்துறை அதிகாரிகளும் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

உடனடியாக தங்களது கிராமத்தில் தோண்டப்பட்ட சாலையை உடனடியாக சீர் செய்து தர உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்ததையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேலைக்காபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகவே போக்குவரத்துக் கடுமையாக பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News