ஏழை மாணவர்களுக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நிதி உதவி

கடம்பத்தூர் அரசு மேனிலைப்பள்ளியில் தேர்ச்சி பெற்று மேற்படிப்பிற்கு செல்லும் 5 ஏழை மாணவர்களுக்கு ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மேற்படிப்பிற்கு 50 ஆயிரம் நிதி உதவி அளித்தார்.;

Update: 2023-07-07 02:00 GMT

ஏழை மாணவர்களின் மேற்படிப்பிற்காக ரூ. 50 ஆயிரம் நிதி உதவி அளித்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்.

திருவள்ளூர் மாவட்டம், வெண்மனபுதூரை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பி.பொன்னுசாமி. இவரது மகன் பி.பி.மூரத்தி அமெக்காவில் உள்ள கேன்சர் பையாலஜி பிரிவு ஆசோசியியேட் பேராசியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் அவரின் மகன் துணையுடன் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பி.பொன்னுசாமி, ஆண்டுதோறும் அரசுப் பள்ளி ஏழை மாணவ, மாணவிகளை தேர்வு செய்து தலா ரூ.10.000 வீதம் ஐந்து அரசு பள்ளி ஏழை மாணவ மாணவிகளுக்கு வழங்கி வருகிறார்.

அந்த வகையில் இந்த ஆண்டு கடம்பத்தூர் அரசு மேனிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த (557/600 ) மாணவி ஆர். வளர்மதி ( பி.காம் ) , மற்றும் இப்பள்ளியில் படித்து ஏழ்மைநிலையில் உள்ள பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவி கே.தமிழரசி ( பொறியியல் கல்லூரி ) எஸ்.ஷாம்குமார் (பொறியியல் கல்லூரி) எம்.பாலாஜி (பி.ஏ. பொருளாதாரம்) , எம்.வசந்த் (பி.ஏ ஆங்கிலம் ) ஆகியோர் மேற்படிப்பிற்கு கல்லூரிகளில் சேர்ந்து படிக்க ஒவ்வொருவருக்கும் தலா ரூ 10.000 வீதம் மொத்தம் ரூ.50, 000 ரொக்கமாக வழங்கி உதவினார்.

இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை .வெ.ரேவதி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பூபாலன் , பொருளாளர் பொன்னுதுரை முன்னிலை வகித்தனர், தமிழ்நாடு அரசு உழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியை வெற்றிச்செல்வி நன்றி கூறினார்.

Tags:    

Similar News