எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
பெரியபாளையம் அருகே எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 75 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பெரியபாளையம் அருகே குடியரசு தினத்தை முன்னிட்டு எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேசிய கொடியை ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை கே ரமேஷ் ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை எல்லாபுரம் ஒன்றிய குழு பெரும் தலைவர் வடமதுரை கே. ரமேஷ் ஏற்றி வைத்து மகாத்மா காந்தி படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி, எல்லாபுரம் ஒன்றிய குழு துணை தலைவர் வழக்கறிஞர் சுரேஷ், மற்றும் வட்டார வளர்ச்சி கணக்கர் ஸ்ரீதர், உதவியாளர் கோதண்டன், மற்றும் உதவியாளர் சத்யநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருக்கண்டலம் ஊராட்சியில் 75-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தேசிய கொடியை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சத்தியமூர்த்தி ஏற்றினார். ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் லிங்கா துரை, ஊராட்சி செயலர் உமாநாத், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.