பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் புனரமைப்பு பணிகள் விரைவில் துவக்கம்
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ரூ.125 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
பெரியபாளையம் பவானிஅம்மன் கோவிலில் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட 125கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு அடுத்த மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார். பட்ஜெட் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பவானிஅம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆடி மாதம் தொடங்கி 14வாரம் நடைபெறும் திருவிழாவில் இங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் கும்மிடிப்பூண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் பெரியபாளையம் பகுதிக்கு செல்லும் சாலைகள் மோசமடைந்து உள்ளதாகவும், பக்தர்கள் தங்குவதற்கு விடுதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பான கோப்புகள் கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு இருந்ததாகவும், தற்போது திமுக ஆட்சி அமைந்ததும் 125கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ள முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார். 125அறைகள் கொண்ட தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு ஒட்டுமொத்த பணிகளுக்கும் முதலமைச்சர் அடுத்த மாத இறுதிக்குள் நாட்ட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். பெரியபாளையம் பவானிஅம்மன் கோவிலில் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட 125கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு அடுத்த மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார். இவ்வாறு தெரிவித்தார்.