திருவள்ளூரில் நவீன பேருந்து நிலையத்தை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. திறந்தார்

சென்னை திருவள்ளூரில் நவீன பேருந்து நிலையத்தை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

Update: 2022-01-21 06:26 GMT
திருவள்ளூரில் கட்டப்பட்ட நவீன பேருந்து நிலையத்தை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் முதன்முறையாக திருவள்ளூர் தாலுகா அலுவலகம் அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2020 -2021 ஆம் ஆண்டு திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வீ.ஜி.ராஜேந்திரன்  மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பயணிகளுக்கு பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றது.

அந்தப் பணிகள் தற்போது முடிவடைந்து உள்ள நிலையில் பேருந்து நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் அமரக்கூடிய இருக்கை வசதி .இரண்டு புறங்களிலும் சாலைகளை கண்காணிக்க 4 சி.சி.டி.வி. கேமராக்கள். மக்கள் பயணிகள் பயன்படுத்த இணையதள வைஃபை வசதி உள்ளிட்ட ஹைடெக் பேருந்து நிலையத்தை இன்று திருவள்ளூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வி. ஜி. ராஜேந்திரன், மேற்கு மாவட்ட செயலாளர் பூபதி ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் திருவள்ளூர் நகராட்சி ஆணையர்.திருவள்ளூர் நகர செயலாளர்  மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News