குவாரியை முற்றுகையிட்டு லாரிகளை சிறை பிடித்து போராட்டம்

Quarry blockade Agitation ஊத்துக்கோட்டை அருகே லாரி மோதி முதியவர் உயிர் இழுப்பு கிராம மக்கள் குவாரியை முற்றுகையிட்டு லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம்.

Update: 2024-03-06 06:30 GMT

முற்றுகைப் போராட்டத்தினால் பல மணி நேரம் காத்துக்கிடந்த டிப்பர் லாரிகள்.

Quarry blockade Agitation

ஊத்துக்கோட்டை அருகே தாமரைகுப்பம் பகுதியில் இயங்கி வரும் அரசு குவாரியின் லாரி மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி அவரது உறவினர்கள் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த தாமரை குப்பம் பகுதியில் அரசு சவுடு மண் குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி கோரிலிருந்து சவுடு மண் ஏற்றிக்கொண்டு பெரியபாளையம் நோக்கி அதிவேகமாக வந்த லாரி ஒன்று தாராட்சி அருகே முன்னே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

Quarry blockade Agitation


குவாரிக்கு வந்த லாரியை சிறைப்பிடித்து போராட்டம் நடத்திய அப்பகுதி பொதுமக்கள்

இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் உயிரிழந்த நபரின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அரசு சவுடு மண் குவாரியை முற்றுகையிட்டும், லாரிகளை சிறைபிடித்தும், போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தகவல் அறிந்து வந்த ஊத்துக்கோட்டை போலீசார் போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கையில், தாமரை குப்பம் பகுதியில் இயங்கி வரும் இந்த சவுடு மண் குவாரியால் நாள்தோறும் பெரியபாளையம், ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் அதிவேகமாக செல்வதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். மேலும் உயிரிழந்த முதியவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News