கனமழை காரணமாக அதிகரித்துள்ள நீர் வரத்தால் கடல் போல காட்சியளிக்கும் புழல் ஏரி
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி மிக முக்கிய பங்கு வகிக்கிறது;
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2 தினங்களாக பெய்த மழை காரணமாகவும் நேற்று மட்டும் செங்குன்றத்தில் 5செ.மீ. மழை பெய்த நிலையில் புழல் ஏரிக்கு நேற்று 256கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று 1128 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 3082மில்லியன் கனஅடி நீர் நிரம்பியுள்ளது.
ஒரே நாளில் 80 மில்லியன் கனஅடி நீர்வரத்து வந்துள்ளது. குடிநீருக்காக ஏரியில் இருந்து 157கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 93.39% நிரம்பி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், இந்த ஆண்டும் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்ற வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.