பெட்ரோல் விலை ரூ. 3 விலை குறைந்ததினால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

பட்ஜெட் கூட்டத்தொடரில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைத்ததற்கு தமிழக முதல்வருக்கு வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்துள்ளனர்;

Update: 2021-08-17 15:33 GMT

திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என அறிவிப்பு செய்ததை தொடர்ந்து பெட்ரோல் விலை 3ரூபாய் பட்ஜெட் கூட்டத்தொடரில் குறைந்ததற்கு தமிழக முதல்வருக்கு வாகன ஓட்டிகள் நன்றிகள் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல் விலை விண்ணை தொடும்  வகையில் தினந்தோறும் உயர்ந்து 100 ரூபாய்க்கு மேலே உயர்ந்த நிலையில் சாமானிய மக்களும் வேலைக்குச் செல்லக் கூடியவர்களும் மிகவும் அவதிக்குள்ளாகி வந்திருந்தனர். 

இந்நிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் 3 ரூபாய் விலை குறைத்து அறிவிப்பு செய்ததால் நேற்று நள்ளிரவில் இந்த பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்ததால் திருவள்ளூர் பகுதியில் 99.81 விலை குறைந்தது. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல பெட்ரோல் விலை 3 ரூபாய் விலை குறைப்பு என்பது சாமானிய மக்களுக்கு அது மிகப்பெரிய சுமை குறைந்து இருப்பதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழக முதல்வருக்கு வாகன ஓட்டிகள் நன்றிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News