திருவள்ளூர் அருகே பெரியபாளையத்தில் கழிவு நீரால் சுகாதாரமற்ற குடிநீர் குளம்

Public Requested Serious Action திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் குடிநீர் குளத்தில் பொதுமக்கள் குப்பைகள் கொட்டுவதால் ,கழிவு நீர் குளமாக மாறியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2024-01-24 04:15 GMT

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் குடிநீர் குளத்தில் மலை போல்குவிக்கப்பட்டுள்ள குப்பைகள்... படத்தைப் பார்த்தாலோ மூக்கின் மேல் கை வைக்க தோணுதுங்கோ....நடவடிக்கை தேவை...

Public Requested Serious Action

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஊராட்சியில் சுமார் 12,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு காரைக்குளம் என்ற ஒரு குளம் உள்ளது . இது 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த குளமாகும் இந்த குளத்தை சுமார் 60 வருடங்களுக்கு முன்பு இப்பகுதி மக்கள் குடிநீர்காக இந்த குளத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் எந்த தற்போது இந்தக் குளத்தில் தற்போது அடர்ந்த ஆகாய தாமரை தாவரங்கள், முட்பொதர்கள்,செடி, கொடிகள் படர்ந்துள்ளது, மேலும்

இந்த குளக்கரையை சுற்றியுள்ள அப்பகுதிகளை சேர்ந்த சிலரின் வீடுகளில் இருந்து பிளாஸ்டிக் பைகளை அமைத்து அதன் மூலம் கழிவுநீர் இந்த குளத்தில் திறந்து விடுகின்றனர். இது மட்டுமல்லாமல் மீன், இறைச்சிகழிவுகள், வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை இந்த குளத்தின் அருகில் கொட்டுகிறார்கள். இதனால் இந்த குளம் கழிவு நீர் குளமாக மாறிவிட்டது. எனவே குளத்தில் உள்ள இந்த தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதோடு அதில் கொசுக்கள் உற்பத்தியாகி கடிப்பதால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் பரவக்கூடிய அபாயமும் உருவாகி உள்ளது . மேலும் தற்போது இந்த குளத்தில் செடி, கொடிகள் படர்ந்து குளமே தூர்ந்து விட்டது, எனவே தூர்ந்து விட்ட குளத்தை தூர்வாரி சீரமைத்து அதை சுற்றிலும் படிகட்டுகள் கட்டி பூங்கா அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது : -பெரியபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள காரைக்குளம் 2.63 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும் இக்குளம் 300 வருடம் பழமை வாய்ந்த குளமாகும் சுமார் 60 வருடத்திற்கு முன்பு இக்குளத்தை இந்த பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனர், மேலும் ஆடு, மாடுகள் புல், வைக்கோல்களை மேய்ந்து விட்டு இந்த குளத்தில் தண்ணீர் பருகும், மேலும் வீடுகளில் சிறு தோட்டம் வைத்துள்ளவர்கள் இந்த தண்ணீரை ஊற்றி மிளகாய், முள்ளங்கி, கீரை உள்ளிட்ட செடிகள் வைத்து சிறு விவசாயம் செய்தனர் .மேலும்2.63 ஏக்கராக இருந்த இந்த குளம் தற்போது ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி ஒரு ஏக்கர் மட்டுமே உள்ளது. மேலும் கரையை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி உள்ளவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை இந்த குளத்தில் விடுகிறார்கள்

இது குறித்து பெரியபாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அப்பபகுதி மக்கள் பல முறை மனு கொடுத்தும். வலியுறுத்தியும் ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை,பல நாட்களாக தேங்கி கிடக்கும்  குப்பைகளால் தொற்று நோய் கண்டிப்பாக பரவும். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொண்டு ஆக்கிரமிப்பு பிடியிலிருந்து குளத்தை மீட்டு சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த கிராமத்தினை நோய் தாக்கும் முன் அதிகாரிகள் கண் விழிப்பார்களா?....என்பதே ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. 

Tags:    

Similar News