தாமரைபாகத்தில் திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
DMK Latest News in Tamil - தாமரைபாகத்தில் திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆவடி.சா.மு நாசர் பங்கேற்று நலதிட்டங்களை வழங்கினார்.;
தாமரைபாக்கத்தில் நடைபெற்ற ஓராண்டு விளக்க கூட்டம்.
DMK Latest News in Tamil - முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 99-வது பிறந்த நாள் முன்னிட்டு, வெங்கல் அடுத்த தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை பகுதியில் திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுகூட்டம் மற்றும் நலத்திட்டம் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கோடு வெளி தங்கம் முரளி தலைமை வகித்தார். அனைவரையும் பொறுப்பு குழு உறுப்பினர்கள் டி.பாஸ்கர், வி.ஜெ.சீனிவாசன், கோடு வெளி.எம்.குமார் ஆகியோர் வரவேற்றார்
ஒன்றிய நிர்வாகிகள் பி. ஜி.முனுசாமி, ஜி.பாஸ்கர், ஆர்.லோகநாதன், கே.ஜி.அன்பு, இ.சுப்பிரமணி, வி.நாகலிங்கம், உமா சீனிவாசன், வி.ஸ்ரீதர், நாராயணசாமி, ஏ.சுப்பிரமணி, ஆளவந்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மத்திய மாவட்ட பொறுப்பாளரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு திமுக ஆட்சியின் செய்த சதனைகள் குறித்து விளக்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு இலவச பஸ் பாஸ், நகை கடன் தள்ளுபடி, பால் விலை குறைப்பு, சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி என எண்ணற்ற திட்டங்களை அறிவித்து மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்தி ஒருவர்தான் தலைவர். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்று மக்களுக்காக ஒவ்வொரு திட்டத்தை சிந்தித்து செயல்பட்டு வரும் ஆட்சிதான் திமுக ஆட்சி என கூறினார்.
பின்னர் 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி, திமுக தலைமை பேச்சாளர் சேலம் சுஜாதா, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் டி.தேசிங்கு, திமுக ஒன்றியச் செயலாளர்கள் புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், ஆர்.ஜெயசீலன், தி.வே.முனுசாமி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் கே.ஜெ.ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ப.ச.கமலேஷ், ஏ.கே.எம் சரத்குமார், ஆயிலச்சேரி.ரகு, ராஜி, ஜெகன், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணி அமைப்பாளர் கே.என். சரத்குமார் நன்றி கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2