புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பொதுவிருந்து

Today Temple News In Tamil- புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பொது விருந்தை பூந்தமல்லி எம்.எல்ஏ., துவக்கி வைத்து மக்களோடு அமர்ந்து சாப்பிட்டார்.

Update: 2022-08-15 23:30 GMT

பக்தர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கிய எம்.எல்.ஏ  கிருஷ்ணசாமி.

Today Temple News In Tamil- திருவள்ளூர் அடுத்த ராமாபுரம் பகுதியில் புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழக்கமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு. இந்நிலையில் இன்று சுதந்திர தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின் பேரில் 75 வது சுதந்திர தினவிழாவையொட்டி நடைபெற்ற பொது விருந்தை பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பக்தர்களுக்கு உணவு போட்டு துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமியும் பக்தர்களோடு அமர்ந்து உணவு சாப்பிட்டார். அதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு இலவச சேலையும் வழங்கினார்.

இதில் திமுக ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் நிர்வாக செயல் அலுவலர் சுசில்குமார் திமுக மாவட்ட பிரதிநிதி ராமச்சந்திரன், வழக்கறிஞர் பிரிவு தியாகராஜன், திமுக பிரமுகர்கள் ஜீவிநாதன், தினேஷ்குமார், அருள்கீதன், தமிழ்செல்வன், ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News