Public Demand Basic Amenities மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை
Public Demand Basic Amenities தாமரைப்பாக்கம் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தாமரைப்பாக்கம் ஊராட்சியில் மழைவிட்டு ஐந்து நாட்களாகியும் வடியாத மழைநீர்.
Public Demand Basic Amenities
திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கம் ஊராட்சியில் மழை நின்று 5.நாட்கள் ஆகியும் தற்போது வரை வடியாத தண்ணீர் தத்தளிக்கும் பொதுமக்கள். சாலை, குடி தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் தாமரைப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 8,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த பருவ மழை மற்றும் புழல் காரணமாக தாமரைப்பாக்கம் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியில் மழைநீர் இடுப்பளவிற்கு தேங்கி நின்று மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இது குறித்து இப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் தாமரைப்பாக்கம் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியில் சுமார் 200.க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 1000.க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதாகவும் தாங்கள் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மழைநீர் தேங்கி நின்று வடியாத நிலையில் உள்ளதாகவும் இதனால் மக்கள் வெளியேற முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியதாகவும்,மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் விஷப்பூச்சி பாம்புகள் வீட்டுக்குள் வருவதாகவும், இப்பகுதியில் உள்ள கால்வாய் தூர்வாராத காரணத்தினால் மழைநீர் செல்ல வெளியேற்ற முடியாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசி ஒருவர் தெரிவிக்கையில் தன் மாடுகளை வைத்து அவை மேய்த்து வந்து பால் வியாபாரம் செய்து வருவதாகவும், சமீபத்தில் பெய்த மழை காரணமாக தங்கள் பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது அப்போது தண்ணீரில் விஷ பாம்பு ஒன்று வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த கன்று குட்டியை கடித்து உயிரிழந்தது.
மழை நின்று 5.நாட்கள் ஆகியும் நடப்பதற்கு லாயக்கற்ற சாலைகளாக மாறிவிட்டதாகவும். தேங்கி நிற்கின்ற மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி கடிப்பதால் இப்பகுதியில் உள்ள சிலருக்கு காய்ச்சல் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். இது மட்டுமல்லாமல் நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாமல் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் அதிக விலைக்கு தண்ணீர் வாங்கி வந்து பயன்படுத்தி வருவதாகவும், தற்போது வரை குடிநீர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் விநியோகிக்கப்படவில்லை என்றும். எனவே மாவட்ட நிர்வாகம் கண்டுகொண்டு குடி தண்ணீர், மற்றும் பழுதடைந்த சாலை அகற்றி புதிய சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.