கிராம ஊராட்சிகளை தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்

நான்கு ஊராட்சிகளை ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-06-27 09:00 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள். 

திருவள்ளூர் அருகே கிராம ஊராட்சிகளை பேரூராட்சியில் இணைத்து தரம் உயர்த்தும் திட்டத்துக்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்,  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுக்காவிற்கு உட்பட்ட தாராட்சி, தாமரைக்குப்பம், பேரண்டூர்,செஞ்சியகரம், உள்ளிட்ட நான்கு ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த ஊத்துக்கோட்டை பேரூராட்சியோடு இணைப்பதற்குமான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. தங்கள் கிராமங்களை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தினால் வரி செலுத்தும் முறை அதிகமாகிவிடும், மத்திய அரசு கிராம ஊராட்சிகளுக்காக வழங்கும் பல்வேறு திட்டங்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்டவை தங்களுக்கு கிடைக்காது.


எனவே கிராம ஊராட்சிகளை தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நான்கு கிராமத்தை சேர்ந்த 300- க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் சென்னை - திருப்தி தேசிய நெடுஞ்சாலையில் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கிராம மக்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News