பொங்கல் விளையாட்டு விழாவில் வென்றவர்களுக்கு பரிசு

புட்லூர் ஊராட்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.;

Update: 2024-01-18 09:00 GMT

புட்லூர் ஊராட்சியில் பொங்கல் பண்டிகை விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருவள்ளூர் அடுத்த புட்லூர் ஊராட்சியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 66 -ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புட்லூர் ஊராட்சியில் வருடம் தோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பான முறையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். அதேபோல் இந்த ஆண்டு காணும் பொங்கல் அன்று மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.


இந்த விளையாட்டுப் போட்டிகள் புட்லூர் பொங்கல் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து நடத்தப்பட்டது. காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் இரவு 11 மணி அளவில் முடிவடைந்தது உயரம் தாண்டுதல் ,நீளம் தாண்டுதல், கோனி ஓட்டப்பந்தயம், மெதுவாக சைக்கிள் ஓட்டப்பந்தயம், ஒருமையில் பந்தயம், கயிறு இழுத்தல், லெமன் ரேஸ், ஊசி நூல் ,பானை சுமத்தல், கயிறு இழுத்தல், போன்ற கிராமங்களில் விளையாடப்படும் அனைத்து விளையாட்டுகளும் நடத்தப்பட்டன.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு முதல் பரிசாக டிவி மற்றும் விலை உயர்ந்த பொருள்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது.


பரிசுகளை புட்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லோகம்மாள் கண்ணதாசன் ஒன்றிய கவுன்சிலர் திலீப் ராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொங்கல் விழா குழுவினர்கள் வழங்கினார்கள் .

இந்த பொங்கல் விழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்களை உற்சாகமாக கலந்து கொண்டு இது போன்ற விளையாட்டுகள் நடத்தப்படுவதால் எங்களுக்கு உற்சாகமாக இருக்கிறது. இந்த பொங்கல் விழாவை நாங்கள் சிறப்பாக கொண்டாடினோம்.  பொங்கல் விழா குழுவினர் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றி. பரிசு பெற்றுச் சென்றவர்களும் கலந்து கொண்டவர்களும் நன்றியை தெரிவித்தனர்.ருவள்ளூர் அடுத்த புட்லூர் 

Similar News