தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவச்சு
திருவள்ளூர் அருகே தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணம் திருட்டு. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவச்சு.;
திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு பிரியா நகரை நகர் பகுதியில் வசித்து வருபவர் தனியார் தொழிற்சாலை ஊழியர் மனோகரன்(50). இவர் ஸ்ரீராம நவமி அன்று மனோகரன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டை பூட்டி விட்டு திருவள்ளூர் அருகே புலியூர் கண்டிகை கிராமத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் ஸ்ரீராமநவமி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜையில் சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார்.
பின்னர் சாமி தரிசனம் முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு திறக்கப்பட்டு இருந்ததை. பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த செயின், மோதிரம், கம்மல், வளையல் என 67 சவரன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனதை கண்டு தெரியவந்தது.
இதுகுறித்து மனோகரன் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.