மோட்டார் சைக்கிள் மீது மீது லாரி மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் பலி
Bike Accident Today- பொன்னேரி-பஞ்செட்டி நெடுஞ்சாலையில் பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியதில் மின்வாரிய ஊழியர் தூக்கி வீசப்பட்டார்.;
Bike Accident Today-திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மேடு பகுதியில் வசித்து வருபவர் யுவராஜ். இவர் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் பொன்னேரி அருகே உள்ள ஆரணி அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மாலை யுவராஜ் தனது மோட்டார் சைக்கிளில் பொன்னேரிக்கு சென்று கொண்டிருந்தபோது பொன்னேரி-பஞ்செட்டி நெடுஞ்சாலையில் பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இதில் யுவராஜ் தூக்கி வீசப்பட்டு உள்ளார்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் யுவராஜ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த பொன்னேரி போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2