எல்லாபுரம் ஒன்றியத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு எல்லாபுரம் ஒன்றியத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.

Update: 2024-01-11 09:00 GMT

எல்லாபுரம் ஒன்றியத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சக்திவேலு வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தில் உள்ள நியாய விலை கடைகளில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி கூட்டுறவு வங்கி செயல் ஆட்சியர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு பெரியபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சுமார் 3,200 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000, வேட்டி சேலை, பச்சரிசி,கரும்பு, உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கி பேசினார்கள். பெரியபாளையம் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைமை எழுத்தர் மாரி, விற்பனையாளர்கள் உதயகுமார், முருகன், உடன் இருந்தனர்.


இதேபோல் கன்னிகைபேர், திருக்கண்டலம், அழிஞ்சிவாக்கம், அக்கரபாக்கம், அத்தங்கிகாவனூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்த ₹1000, வேட்டி சேலை, பச்சரிசி,கரும்பு, ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பினை எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சக்திவேலு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம், நிர்வாகிகள் நீதிசெல்வசேகரன், சுரேஷ், வீரமணிகண் டன்,மோகன், தினேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆலப்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா ஆறுமுகம் குடும்ப அட்டதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். தாமரைப்பாக்கம் ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையில் ஊராட்சி மன்ற தலைவர் கீதா துளசிராமன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். குமரப்பேட்டை ஊராட்சி நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ் பாபு பொங்கல் பரிசுத்தொகுப்பினை தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News