பொங்கல் பண்டிகை விளையாட்டு போட்டிகள்; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
திருவள்ளூர் அருகே மஞ்சக்குப்பம் கிராமத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாமக மாநில இளைஞரணி செயலாளர் பால யோகி பரிசு வழங்கினார்.;
திருவள்ளூர் அருகே மஞ்சக்குப்பம் கிராமத்தில் பொங்கல் பண்டிகை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தை பொங்கல் திருநாளை முன்னிட்டு மஞ்சாகுப்பம் கிராமத்தில் குழந்தைகள் பெண்கள் பெரியவர்கள் என பலரும் இணைந்து பொங்கல் விழாவினை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
33-ம் ஆண்டு தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன, இதில் குழந்தைகளுக்கான தவளை ஆட்டம், உருளைக்கிழங்கு போட்டி, சாக்குப்பை விளையாட்டு, பெண்களுக்கான கோலப்போட்டி, பலூன் ஊதும் போட்டி, ஆண்களுக்கான வாலிபால், கபடி, உறியடித்தல், கிரிக்கெட் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது, மேலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞர் சங்க செயலாளர் லயன் டாக்டர் பாலா என்கிற பாலயோகி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சுரேஷ், திருவாலங்காடு மகேஷ், லோகேஷ் சமூக சேவகர் கோதண்டன், கன்னியப்பன், வினோத் என்கிற நடராஜ், பி சி குமார், தருமன், சுமன், பி. வி.குப்பன், ஆறுமுகம், பாலமுருகன்,மாரி ஐயப்பன், சக்கரவர்த்தி மற்றும் கிராம பெரியோர்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.