கிருஷ்ணா கால்வாயில் மீன்பிடிக்க சென்ற இளைஞரை தேடும் போலீசார்

சிட்றபாக்கம் அருகே கிருஷ்ணா கால்வாயில் மீன்பிடிக்க சென்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கி மாயமானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.;

Update: 2023-09-07 03:40 GMT

கிருஷ்ணா கால்வாயில் விழுந்த இளைஞர்.

ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் மீன் பிடிக்க சென்றபோது நீரில் தவறி விழுந்த வலையை தேடி சென்ற இளைஞர் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த 43.பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ் (28).இவருக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும் மூன்று வயதில் மகள், மற்றும் ஒரு வயதில் மகன், உள்ளனர். இந்த நிலையில் சுரேஷ் கிடைத்த கூலி வேலையை செய்து கொண்டு பிழைப்பு நடத்தி வந்தார்.

நேற்று மதியம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிட்றப்பாக்கம் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய் நீரில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மீன் பிடிக்க வைத்திருந்த வலை கைத்தவறி தண்ணீரில் விழுந்துள்ளது.இதனை கண்ட அவர் மீன்பிடிக்கும் வலையை தேட முற்பட்டபோது. எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தேர்வாய் கண்டிகை தீயணைப்பு துறையினர் நீரில் மாயமான கூலி தொழிலாளி சுரேஷை தொடர்ந்து தேடி வருகின்றனர்.இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News