Pmk General Assembly Meet திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம்
Pmk General Assembly Meet திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, சிறப்புரை.;
Pmk General Assembly Meet
மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் கிழக்கு ஒன்றியம் கொள்ளுமேடு பகுதியில் உள்ள அருணலட்சுமி திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பாமக சார்பில் பொதுகுழு கூட்டம் மாவட்ட செயலாளர் சிவபிரகாசம், தலைமையில் நடைபெற்றது, மாவட்ட தலைவர் சபாபதி அனைவரையும் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி முனுசாமி, கல்பனா ராமமூர்த்தி, மேகநாதன், அப்புகவுன்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் அம்பத்தூர் நகரமன்ற தலைவர் கே.என்.சேகர், மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலயோகி ஆகியோர் கலந்துகொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி பூத்கமிட்டி நிர்வாகிகள் அமைத்து தேர்தல் களப்பணிகளை செய்வது, புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், அனைத்து கிளைகளில் கொடிகளை ஏற்றுதல், தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிட வலியுறுத்தியும், சாதிவாரி கணக்கு எடுப்பு எடுத்திட வலியுறுத்தியும் மற்றும் பல்வேறு பணிகள் மேற்கொள்வது குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கி கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஞானபிரகாசம், தமிழ்உமாபதி, பழனி, செந்தாமரை, லிங்கமூர்த்தி,மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ஆனந்தன், மாவட்ட பொருலாளர் கிருஷ்ணவேணி, மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், மாவட்ட அமைப்பு தலைவர் பூபாலன் மாவட்டத் துணைச் செயலாளர்கள் லட்சுமிநாராயணன், ரவிச்சந்திரன், பாலாஜி, மாவட்ட துணை செயலாளர்கள் முனுசாமி, ஸ்ரீதிருமலை, மோகன், அருண்செல்லப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பூபதி, நடராஜன்,மகளிரணி தமிழ்செல்வி, வசந்தகுமாரி, இளைஞரணி ராஜேஷ், மணிகண்டன் சரவணரூபன், மாணவரணி விக்னேஷ், மாரிமுத்து,தாமோதரன், கீர்த்திவாசன் , பகுதி செயலாளர்கள் பாஸ்கர், ராஜேந்திரன், மூர்த்தி, சின்னதுரை,கோபால், ஒன்றிய செயலாளர்கள் துளசிங்கம், பழனி, செந்தில்குமார், கோபி ,வில்லிவாக்கம் ஒன்றிய பொருளாளர் பவானிபன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் வில்லிவாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சகாதேவன் அனைவருக்கும் நன்றி கூறினார்