திருவள்ளூரில் மின்சாரம் பாய்ந்து பன்றி மேய்ப்பவர் உயிரிழப்பு

திருவள்ளூரில் மின்சாரம் பாய்ந்து பன்றி மேய்ப்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2023-03-02 03:30 GMT

உயிரிழந்த சந்திரன்.

திருவள்ளூர் காக்களூர் ஏரிக்கரை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் (38). இவரது மனைவி நாகம்மாள். இந்த தம்பதியினருக்கு ஜனனி, ஜான்சி என்ற 2 மகள்களும், ராஜீ என்ற மகனும் உள்ளனர். சந்திரன் பன்றி மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம் போல் இரவு நேரத்தில் பன்றிகளை அவிழ்த்துவிட்டு இன்று காலை அதனை பிடிப்பதற்காக சென்றுள்ளார். திருவள்ளூர் வி.எம்.நகர் அருகில் தேடியபோது பன்றிகள் இல்லாததால் அங்கிருந்த காம்பவுன்ட் சுவர் மீது ஏறி பார்த்துள்ளார். அப்போது சுவர் மேலிருந்து அலறிக்கொண்டே கீழே விழுந்தவர் அங்குள்ள சேற்றில் முகம் புதைந்துது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் டவுன் போலீசார் சேற்றில் சிக்கி உயிரிழந்த சந்திரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

பன்றியை தேடுவதற்காக சுவர் மீது ஏறி செல்லும் போது உயர் அழுத்த மின்சார கம்பி மீது கை பட்டு கீழே விழுந்து இறந்தாரா அல்லது சுவர் மீது செல்லும் போது தவறி விழுந்து இறந்தாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காக்களூர் ஏரிக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News