குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருவள்ளூர் அருகே 20 ஆண்டுகளாக வசித்து வரும் குடியிருப்பு வாசிகளுக்கு வீட்டுமனை பட்டா அளிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.;
20ஆண்டுகாலமாக வசித்து வரும் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருவள்ளூர் அடுத் தகடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளேரிதாங்கல் கிராமத்தில் சுமார் 20 ஆண்டு காலமாக 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி வட்டாட்சியரிடம் பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.மேலும்அடிப்படை வசதிகளான மின் இணைப்புகள், குடிநீர் வசதி இணைப்புகள் போன்றவைகளை பெறுவதற்கு பட்டா தேவைப்படுவதால் அப்பகுதில் வாழும் பொதுமக்கள் 20 ஆண்டு காலமாக பட்டா பெற முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி வழக்கறிஞர்கள் தமிழ்மாறன், விவேக், தலைமையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீசிடம் மனு அளித்தனர். இது குறித்து மனு அளிக்க வந்த பொதுமக்கள் தெரிவிக்கையில்
தாங்கள் மேற்கொண்ட பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகவே வசித்து வருவதாகவும், தங்களுக்கு பட்ட வழங்குமாறு பலமுறை மனுநீதி நாளிலும், ஊராட்சி அலுவலகத்திலும், வருவாய் துறை அதிகாரிகளையும், வட்டாட்சியரிடமும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும். பட்டா இல்லாத காரணத்தினால் தாங்கள் பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் வாழ்ந்து வருவதாகவும், அப்பகுதியில் வாழும் மக்களுக்கு கர்ப்பிணி பெண்களுக்கு அவசர உதவிக்கு மருத்துவமனை செல்ல இரவு நேரங்களில் சாலை வசதி இல்லாத காரணத்தினால் மிகவும் அவதிப்படுவதாகவும், தெரு விளக்கு வசதி இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் விஷப்பூச்சி பாம்புகள் உள்ளிட்ட நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும். இது மட்டுமல்லாமல் மழை காலங்கள் வந்துவிட்டால இருக்கின்ற தற்காலிக சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றுவிடும் இதனால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல மிகவும் அவதிப்பட்டு வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.