வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருவள்ளூர் அருகே தொடுகாடு ஊராட்சியில் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவள்ளூர் அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்ற 10 குடும்பங்களுக்கு அதே இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட தொடுகாடு ஊராட்சியில் சுமார் 3000.க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் பழங்குடி இன மக்களுக்கு என்று தொகுப்பு வீடு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில். நயப்பாக்கம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்ற10 குடும்பங்கள் தங்களுக்கு நயப்பாக்கம் பகுதியில் உள்ள இடத்தை அவர்களுக்கு வீட்டுமனை பட்டாவாக மாற்றி தர வேண்டும் என்றும், வழங்கினால் நாங்கள் தொடுகாடு போக மாட்டோம் என்றும் தொடுகாடு பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதி போன்றவை கூட இல்லை என்றும், இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம் என்றும், உடனடியாக எங்களுக்கு நயப்பாக்கம் பகுதியில் உள்ள எங்களுடைய இடத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்கி அதே இடத்தில் குடி இருக்க எங்களுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாவட்ட நலக்குழு தலைவர் நீல வானத்து நிலவானவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.